சென்னை மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் கத்தியால் கெக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய ரவுடி தினேஷ் பல மாதங்களாக போலீசார் கண்களில் மண்ணை தூவிவந்தார்.
அவரை பிடிக்க தலையால் தண்ணி குடித்துக்கொண்டிருந்த நிலையில், வாலஜாபேட்டையில் உள்ள தனி வீட்டில் அவர் அழகிகளுடன் கும்மாளம் அடிப்பதாக தகவல் வந்தது. போலீசார் வீட்டை முற்றுகையிட்டபோது 5 இளம்பெண்களுடன் ரவுடி தினேஷும் அவரது கூட்டாளி செல்வராஜும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது தினேஷ் வழுக்கி விழுந்தார் என அவர்கள் தெரிவித்தனர். எப்படியோ இருவரையும் கைதுசெய்தனர்.
அவருடன் இருந்த 5பெண்களையும் கைது செய்து காப்பகத்துக்கு அனுப்பினர்.