லலிதா ஜீவல்லர்ஸ் நகை கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களை சுறுசுறுப்பாக தேடிய போலீசார், வாகன சோதனையில் சிக்கிய கண்னப்பனை கொண்டு கொள்ளையர் தலைவர் முருகனையும் மற்றவர்களையும் கைது செய்தனர்.
முருகன் மூலம் புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையும் துப்பு துலங்கியது. இதனால் 9 மாதங்களாக கிடப்பில் கிடந்த வழக்குக்கு விடை கிடைத்தது.
இதனால் மெத்த சந்தோஷம் அடைந்த தனிப்படை போலீசார் திருச்சி ஒப்பிலியப்பன் கோயிலில் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.













