நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டதால் எரிபொருட்களின் விலை சிறிது இறக்கம் கண்டு, பெருமளவு ஏற்றம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.74.78 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் மட்டும் குறைந்து, லிட்டருக்கு ரூ.69.13ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து மாற்றம் கண்டு வந்த நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் சற்று ஆறுதலுடன் காணப்படுகின்றனர்.















