நாட்டின் 2-வது சுகாதாரமான புண்ணிய தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேர்வு

0
1364

மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தூய்மையான புனித தலங்களை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் மீனாட்சியம்மன் கோயில் உள்பட 10 முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தூய்மை, சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது.

தற்போது அந்த பட்டியலில் இடம்பெற்ற கோயில்கள் அதன் தூய்மையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவிலேயே தூய்மையான புனித தலங்கள் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் இந்தியாவிலேயே 2வது சிறந்த சுகாதாரமான புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவில் முதல் தூய்மைதேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு விருதை மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஜல் சக்தி அமைச்சகம், புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகனிடம் வழங்கியது. ஜல் சக்தி மத்திய அமைச்சர் ஸ்ரீகஜேந்திரசிங் ஷெகாவத், இணை அமைச்சர் ஸ்ரீரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here