சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அதிமுக சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படி நான்கு முக்கியமான நபர்களும் ஒரே மேடையில் தேர்தல் நேரத்தில் கூட மேடைக்கு வந்தது இல்லை.
இந்த விழாவில் ரஜினி அமித் ஷா காஷ்மீர் விஷயத்தில் எடுத்த நடவடிக்கை மிக மிக முக்கியமானது. அவர் மிகவும் துணிச்சலான நடவடிக்கையை எடுத்து இருக்கிறார். அவரின் மிஷன் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று பேசினார். பதிலுக்கு அமித் ஷா, ரஜினியுடன் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தன்னுடைய அழைப்பை ஏற்று இங்கே அவர் வந்ததற்கு நன்றி, என்று ரஜினியை புகழ்ந்து தள்ளினார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்திற்கு முன்பே அழைப்பு சென்று விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அழைப்பிதழில் அவர் பெயர் இடம் பெறவில்லை அப்படின்னா அழையா விருந்தாளியா அவர்…?