முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைதுசெய்யப்பட்டு 50 நாட்களாக சிறைவைக்கப்பட்டார். அதையடுத்து அமலாக்கத்துறையினர் அந்த வழக்கு தொடர்பாக அவரை கைதுசெய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர்.
அனுமதி வழங்கப்பட்டதையடுத்து சிதம்பரத்திடம் இன்று காலை 3 அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் 2 மணி நேரம் டெல்லி திஹார் சிறையில் விசாரித்தனர். சிதம்பரத்தை விசாரித்தபின்பு அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.இதனால் நாளை அவரது சிறைக்காவல் நாளையோடு நிறைவடையாது.














