‘தல’ ஆக பொன்னார் சிறப்பு வழிபாடு

0
671

தமிழக பாஜக தலைவர் பொறுப்பு இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பிழந்த பொன். ராதாகிருஷ்ணன் தற்போது எந்த பதவியும் இல்லாததால் போரடித்துப்போனதால், மாநில தலைவராகி காலத்தை கடத்தலாம் என எண்ணுகிறார். தமிழிசை போல் மாநில தலைவராகி, வயதாகும் காலத்தில் ஏதாவது மாநில கவர்னராக செட்டிலாகும் விருப்பம் அவருக்கு வந்துவிட்டது.
ஆனால், வானதி சீனிவாசன், இல. கணேசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் என பலரும் இந்த பொறுப்புக்கு வரிசை கட்டி நிற்பதால் பொன் ராதாகிருஷ்ணன் வாடிப்போயுள்ளார். ஆள்பவரோடு ஆண்டவரும் துணை இருந்தால்தான் நடக்கும் என்பதால் சமீப காலமாக அதிக கோயில் குளங்களுக்கு சென்று வருகிறார்.
முத்தாய்ப்பாக, கும்பகோணம் அருகே பதவி வாய்ப்புகளை வாரி வழங்கும் அம்பாள் இருப்பதாக கேள்விப்பட்டார். அதன் அடிப்படையில் அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி ஆலயத்துக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here