ரஃபேலில் பறந்தார் ராஜ்நாத்சிங்

0
1464

இந்திய ராணுவத்துக்கு முதல் ரஃபேல் விமானம் வாங்குவதற்கு 87ஆவது விமானப்படை நாளும், ஆயுத பூஜை விழாவும் இணைந்த காலகட்டத்தை அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்காக ஃபிரான்ஸ் சென்ற ராஜ்நாத்சிங் முறைப்படி பிரான்ஸ் அரசிடம் இருந்து விமானத்தை பெற்றார். அதில் ஓம் என்ற எழுத்தை எழுதி ஆயுத பூஜை சம்பிரதாயத்தை முடித்தார். தேங்காய், எலுமிச்சை பழத்தை வைத்தார். சென்சர் கொம்பில் கயிறு கட்டினார். அதையடுத்து விமானத்தில் ஏறி பறக்க ஆயத்தமானார். அவருக்கு விமானப்படை அதிகாரி தலையில் ஹெல்மெட் அணிவித்தார்.
பார்வையாளர்களை பார்த்து கைவிரலை உயர்த்தி காட்டினார் ராஜ்நாத்சிங். பின்னரும் விமான ஓட்டி தயாராக சில நிமிடங்களானது. அவர் தயாரானதும் மீண்டும் கைவிரலை உயர்த்திக்காட்டினார் ராஜ்நாத் சிங். இதையடுத்து சில நொடிகளில் விமானம் பறந்தது.
முதன்முதலாக வெளிநாட்டில் இந்து சமய சம்பிரதாயத்துடன் ஒரு ராணுவ விமான வெள்ளோட்டம் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here