யார் நல்லாசிரியர்?

0
351

இந்தியா சுதந்திரம் அடைந்த 15 ஆவது வருடத்தில், அதாவது 1962ல்,முதன் முதலாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியாவின் குடியரசு தலைவராக சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினமே ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் 5.9.1888ல் மதராஸ் பிரசிடன்சி கல்லூரியிலும், மைசூர் பல்கதலக்கழகத்திலும் பின்பு கல்கத்தா பல்கலைக் கழகத்திலும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கதலக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார்.

நெடுங்காலமாக ஆசிரியர் பணி செய்ததாலும், அப்பணியில் அவருக்கு இருந்த அளப்பரிய ஈடுபாடு காரணமாகவும் தனது பிறந்த தினத்தை அனைத்து ஆசிரியர்களையும் கௌரவப்படுத்தும் விதத்தில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடலாம் என்ற தன்னுடைய ஆவலினைத் தெரிவித்தார். இதனை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது .

ஆசிரியர் தினத்தில் அரசு சில ஆசிரியர்களைத் தேர்ந்கதடுத்து அவர்களுக்கு ‘நல் ஆசிரியர்’ விருது வழங்கி கௌரவிக்கிறது. மாநிலஅரசுகளால் மாநில நல்லாசிரியர் விருதும், மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதும். ஐக்கிய நாட்டு சபையினுடைய ‘யுனஸ்கோ’ நிறுவனத்தால் உலகளாவிய ஆசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. சமஸ்கிருதம், பெர்சிய, அரேபிய கமாழி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கற்று தரும் சிறப்பு ஆசிரியர்களுக்கும் பல்கதலக்கழக ஆசிரியருக்களுக்கும் தனித்தனி நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

நல்லாசிரியரை அடையாளம் காண்பது மிக எளிதானது.மாணவர்களே அவரை அடையாளம் காட்டி விடுவர். எனவே, ஆசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் பட்டியலுக்கு விண்ணப்பம், சான்றாவணம் எதையும் கேடக் வேண்டியதில்லை. மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு கல்வித்துறை தாமாக தயாரிக்க வேண்டும்.

ஆசிரியர்களில் சிலர் திறமையுள்ள ஆசிரியர்கள் என்றும், சிலர் பயனுள்ள ஆசிரியர்கள் என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள். திறமையான ஆசிரியர்கள் தங்களுக்கு தரப்பட்ட பாடங்களை சரியாகக் கற்றுத்தருகிறார்கள். பயனுள்ள ஆசிரியர்கள் பாடங்களை சிறப்பாகக் கற்றுத் தருவதுடன் மாணவரின் பக்குவத்தை உணர்ந்து பாடத்திட்டத்தில் இல்லாத விஷயங்களையும் மாணவருக்கு கற்றுத்தருகிறார்கள். திறதமயான ஆசிரியர்கள் தேர்வு முடிவுகளைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்கள். பயனுள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறார்கள்.

இந்த இரண்டு விதமான ஆசிரியர்களின் தன்மையும் ஒரே இடத்தில் இணைகிறபோது ஆரோக்கியமான ஆசிரிய,-மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

“பயிற்றுப் பல கல்வி தந்து இப்பாரினை உயர்த்திடல் வேண்டும்”என்று ஆசிரியர் கடமை பற்றி பாரதிதாசன் கூறுகிறார். ஓர் ஆசிரியர் அர்ப்பணிப்பு உணர்வோடு மாணவர்களுக்குபோதிக்க வேண்டும். ஊக்கப்படுத்த வேண்டும். மாணவரின் திறமையை அடையாளப்படுத்த வேண்டும். ஒரு நல்லாசிரியர் ஒரு மாணவனுக்கு மிகப்பெரிய உந்துதலாகவும், அவன் அடைய விரும்பும் இலட்சியத்துக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்.

இதற்கு உதாரணம் 2020ல் மகாராஷ்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பரித்தவாடி என்ற கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ரஞ்சித் சிங் டிஸ்சாலி.

இவர் 2009ல் பரித்தவாடி பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் பணியாற்ற வந்தபோது பள்ளிக் கட்டடம் இடிந்து விழும் நிலைமையில் இருந்தது. பள்ளிக்கு மாணவர்கள் வருகை 2% தான் இருந்தது. அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலரும் பழங்குடியினர். பாட புத்தகங்கள் அனைத்தும் பழங்குடியினர் மொழியில் இல்லாமல் இருந்தது. எனவே பள்ளிக்கு வந்த மாணவர்களால் பாடப் புத்தகத்தை படிக்க முடியவில்லை.

எனவே, ரஞ்சித் சிங் முதலில் பழங்குடி மொழியினை தான் கற்றுத் தேர்ந்தார் .பாடப்புத்தகங்கதள மாணவர்கள் எளிதில் புரியும் அளவிற்கு பழங்குடி மொழியில் மொழி பெயர்ப்பு செய்து அந்த புத்தகங்களை தரவு தகவல் குறியீடு மூலம் மாணவர்களைப் படிக்க வைத்தார்.

இதன் விளைவாக, விரைவிலேயே 100% மாணவர்கள் பள்ளிக்கு வருதக தந்தனர். சிறார் திருமணம் முற்றிலும் தடுக்கப்பட்டது. 85% மாணவர்கள் உயர் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இவரது முயற்சிக்கு மகாராஷ்டிரா மாநிலம் அங்கீகாரம் தந்ததோடு மத்திய அரசின் தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் தரவு குறியீடு பாடப் புத்தகங்களாக நாடெங்கும் விநியோகிக்க முடிவெடுத்தது.

அது மட்டுமல்லாமல் ரஞ்சித் சிங் பாகிஸ்தான், பாலஸ்தீனம், ஈராக், ஈரான், அகமரிக்கா, வடகொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு உலக அமைதியை மையப்படுத்தி 19,000 மாணவர்களுக்கு கருத்துரை ஆற்றியிருக்கிறார். இதுபோக, 83 நாடுகளில் உள்ள சுமார் 1400 கல்வி கூடங்களில் பயிலும் 85,000 மாணவர்களுக்கு விஞ்ஞான பரிசோதனைகளை கணினி செயலி வாயிலாக கற்பித்திருக்கிறார்.

இவரது செயலால் அந்தப் பகுதியில் 25 % ல் இருந்து 35 % வரை விவசாயமும் செழித்திருக்கிறது. இவருக்கு உலகளாவிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஏஞ்சலோ என்பவர் உலகப்புகழ் வாய்ந்த சிற்பி. இவர் சிலையை வடிக்க சலவைக்கல் தேர்ந்தெடுக்கும் போது, “இந்த சலவைக் கல்லுக்குள் ஒரு தேவ தூதனைப் பார்த்தேன். அதிலிருந்து அவனை விடுவிக்கும் வரைக்கும் செதுக்குவேன்”என்று கூறியிருக்கிறார்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் செதுக்கப்பட வேண்டிய சலவைக்கற்களாகவே ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்கள் சிந்தனையை செதுக்கி அவர்களுக்குள் இருக்கும் தேவதூதனை வெளிக்கொணர்பவரே நல்லாசிரியர்.

அலெக்சாண்டர் பிறந்தவுடன் அவரது தந்தையான மாசிடோனிய மன்னர் பிலிப் தனக்குமகன் பிறந்ததை விட, தனது மகனுக்கு கல்வி கற்பிக்க அரிஸ்டாட்டில் என்ற பேரறிஞர் இருக்கிறார் என்று அகமகிழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.

‘நான் இன்றுவரை வாழ்ந்ததற்கு என் பெற்றோருக்கு கடமைப்பட்டுள்ளேன். நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கட்டுப்பட்டுள்ளேன்’ என்று அலெக்சாண்டர் பின்னாளில் கூறியிருக்கிறார்.

வில்லியம் மார்க்ஸ், ‘ குழந்தைகள் நிறைய வாய்ப்புகளை உள்லடக்கிய பெட்டகம் போன்றவர்கள்.அதனை ஆசிரியர்களால் தான் அடையாளம் காணமுடியும்’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தனது பதவிக்காலம் முடிந்ததும் ஐஐடியின் ஆசிரியர் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். மாணவ்ர்களுக்கு போதிப்பதே தனக்கு மகிழ்ச்சியை தருகிறது ’ என்றார்.

எதிர்கால இந்தியா மாணவர்களின் கையில் இருக்கிறது. அந்த மாணவர்கள் ஆசிரியரின் கைகளில் இருக்கிறார்கள்.

  • முனைவர் பிரபாகரன், வழக்கறிஞர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here