கார் மோதி இஞ்சினியர் உட்பட இருவர் காயம்

0
694

அம்பை அருகில் உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி குணா (20)வும் அவரது நண்பரான  மகேந்திரனும் (21) வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ள மகேந்திரனின் உறவினர் வீட்டிற்கு சென்று அங்கிருந்து அம்பைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர்.

களக்காடு அருகே பத்மநேரி கேசவநேரி பாலத்தின் அருகில் வந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் குணா, அவரது நண்பர் மகேந்திரனும் படுகாயமடைந்தனர். களக்காடு போலீசார் நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here