கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் மணிகண்டன்,25; வீட்டை ஒட்டியவாறு பெட்டிக்கடை
வைத்துள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் மின்சாரம் நின்றதால், மணிகண்டன் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது வீட்டின் கூரை தீ பிடித்து
எரிய தொடங்கியுள்ளது. உடன் அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயிணை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வீடு முழுவதும் பரவியது.

வீடு எரிந்து முடிந்ததும் பொதுமக்கள் சென்று பார்த்ததில், இரும்பு கட்டிலுக்கு ககீழே மணிகண்டன் உடல் கருகிய நிலையில் இறந்து
கிடந்தார். தகவலறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.