தென்காசி கட்டளை குடியிருப்பு பகுதியில் வசித்தவர் கந்தசாமி. ஆட்டோ ஒட்டுநரான இவர் வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்காததால் உறவினர்கள் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். அருகே அவர் மனைவி இரத்தம் கக்கிய நிலையில் இறந்து கிடந்தார். மூத்தமகன் சின் முத்திரனுமிறந்த நிலையில் கிடந்துள்ளான். மற்றொரு மகன் 2 வயது ஏகாந்த மூர்த்தி ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அவனை மருத்துவமணையில் சேர்த்தனர்.
வீட்டு சுவற்றில் ‘எங்கள் சாவிற்கு வறுமை தான் காரணம் என’ எழுதி இருந்தது. வறுமை காரணமாக மனைவி விஷ மருந்து சாப்பிட்டுள்ளார். குழ்ந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கி ஆட்டோ டிரைவர் கந்தசாமி தற்கொலை செய்துள்ளார். காவல்துறையினர் விசாரணையில் நடத்தி வருகின்றனர்.













