வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய மொபைல் ஆப்

0
1239

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய செல்போன் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர்
சத்யபிரதா சாகு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அக்டோபர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 2020 ஜனவரியில் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய செல்போன் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இணையத்தில் ஆதாரத்துடன் வாக்காளரே திருத்தம் செய்யலாம்.

1.9.2019 முதல் 30.9.2019 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here