நாங்குநேரி தேர்தல் களத்தில் ஒரு கவர்ச்சி வேட்பாளராக கலக்கி வருகிறார் ஹரி நாடார். கைகள், கழுத்தில் மின்னும் நகைகள், விரித்த தோகை கூந்தல் என வித்தியாசமான கெட் அப்பில் வலம் வருகிறார்.
தொகுதிக்கு எங்கு சென்று வாக்கு கேட்டாலும் அவர் அணிந்திருக்கும் பவுன்கணக்கான நகையை காட்டி ‘நகை என்ன விலை?’ என்று கேட்டு துளைத்தெடுக்கிறார்களாம். அத்தோடு விட்டால் பரவாயில்லை, நகையை தொட்டு, இழுத்துப்பார்த்து ‘தங்கமா, கவரிங்கா?’ என்று வேறு ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறார்களாம்.
ஏற்கனவே, இடைத்தேர்தல் பற்றி எதுவும் தெரியாமல் களமிறங்கிவிட்ட ஹரிநாடார், தேர்தல் செலவுக்கு திக்குமுக்காடி நிற்கிறார். விட்டால் போதும் என்று வெளியேறவும் முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலையில் தவிக்கிறார்.
இதற்கிடையில் தொகுதி மக்களும் வாக்களிப்பதுபற்றி பேசாமல் நகை விலை கேட்டு கடுப்பேற்றுவதால் வாக்கு கேட்க கூட வாய் வராமல் திணறிப்போய்விடுகிறார்.















