சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் கோபிநாத் களமிறங்கினர். கோபிநாத் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சசிதேவ் மற்றும் முருகன் அஸ்வின் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்க உள்ளது.