இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
தென்ஆப்பிரிக்க அணியில் புதுமுக வீரராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்.
போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி மயங்க் அகர்வாலுடன் இணைந்து முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா அடியெடுத்து வைத்தார்.
வெரோன் பிலாண்டரும், ரபடாவும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீசினர். முதல் அரைமணி நேரம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய வீரர்கள் தடுமாறினர். பின்னர் இலகுவாக எதிர்கொண்டு ரன்களை திரட்டினர்.
இதில் ரோகித்தும் மயங்கும் சதமடித்தனர். மயங் 204 பந்துகளில் 13 பவுண்ட்ரி. 2 சிக்சர்கள் அடித்து டெஸ்ட் பந்தயத்தில் தனது முதல் சதத்தை தொடார். கேஷவ் மகராஜ், டேன் பீட், செனுரன் முத்துசாமி ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தீவிரமாக முயன்றும் இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.
இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்களரன்கள்் எடுத்துது.
தென் ஆப்ரிக்க அணி இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 3 ரன்களை எடுத்துள்ளது.














