தமிழகத்தில் கொரோனா பாதித்த பகுதிகள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அபாயம் நீங்காத சிவப்பு மண்டலாமாக நெல்லை உள்ளது. இங்கு எந்தவொரு தொழில் நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது.
நெல்லையுடன் சென்னை, விழுப்புரம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவள்ளூவர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர் ஆகிய மேலும் 16 மாவட்டங்கள் சிவப்பு பட்டியலில் உள்ளன.
திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மஞ்சள் மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயம், சிறு, குறு தொழில்கள் அனுமதிக்கப்படும்.
நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகியவை பச்சை மண்டலங்களாகும். இங்கு ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.