சங்கரன்கோவில் கோவிலில் தலைகீழாக பறந்த தேசியகொடி

0
1445

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் ஆடி தபசு விழா நிறைவு பெற்றது. இந்த ஆலய கோபுரம் தென் மாவட்டத்தில் பிரபலமானது.

ஆலயத்தில் இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு நிர்வாகத்தின் சார்பில் கோவிலின் கோபுர உச்சியில் ஏற்றப்பட்ட தேசிய கொடி தலைகீழாக பறந்தது கோபுரம் மிகவும் உயரம் என்பதால் யாரும் அதை பார்க்க முடியவில்லை.

அருகிலிருந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் தேசிய கொடி தலைகீழாக பறப்பதை கண்டு அதிர்ந்து கோவில் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த மதியம் 12 மணிக்கு பிறகு அந்த கொடி நேராக பறக்க விடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here