கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தை கொண்டான் பகுதியில் உள்ள ராமமூர்த்தி என்பவரது வீட்டுடன் உள்ள ரைஸ் மில்லில் மாட்டு தீவனத்துக்காக ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக மாவாக அரைத்து சுமார் 50 கிலோ அரிசி மாவு மூடை 90 எண்ணம் 4.5 டன் TN64X5805 ( Bolero bickup) என்ற வாகனம் மூலம் குரு பாண்டி ராஜன் என்பவர் மூலம் மதுரை க்கு எடுத்து செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதை மேற்கு காவல் நிலைய தனிப் பிரிவு காவலர்கள் அப்துல் கரீம், அருணாச்சலம் உதவியுடன் உதவி ஆய்வாளர்கள் . ராமச்சந்திரன்,, அருள்மொழி மற்றும் காவலர்கள் கைப்பற்றி . வட்ட வழங்கல் அலுவலர் .ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்









