அதிமுக கூட்டணியில் சிறிது காலமாக உரசல் இருந்துவருகிறது. அது இயல்பாக இல்லாமல் நிர்பந்தத்துக்கிடையே தொடர்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மத்திய அரசு தொடர்ந்து அறிவித்துவரும் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஒருவிதத்தில் பாதகமாக அமைந்துவிடுவதால் அவற்றுக்கு இங்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. அதை அதிமுகவினர் சப்பை கட்டு கட்டி சமாளித்துவந்தாலும் ஓரளவுக்குமேல் அது முடியாததாக உள்ளதாக இரண்டம் கட்ட தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு இணைந்த சட்டமன்ற தேர்தலின்போது அதை உணர்ந்து பாஜக தலைவர்களை சில இடங்களில் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை. இப்போதும் இடைத்தேர்தலில் பாஜக கருத்தை அறிய ஆவல் கொள்ளவில்லை. ஏற்கனவே கூட்டணி கட்சியினரிடம் அதிமுகவே இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று சொல்லிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும், தேமுதிக, பாமக தலைவர்களை தேடிச்சென்று சந்தித்து ஆதரவு கேட்டதும், பாஜக பக்கம் தலைவைத்துக்கூட படுக்காததும் அவர்கள் சுய மரியாதையை சுண்டிவிடுவதாக உணர்ந்தனர்.
அதனால், பாஜகவின் சில தலைவர்கள் முரணாக பேசத்தொடங்கினர். குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார். ஆனாலும், அதிமுக தலைவர்கள் சாதுர்யமாக அதை தவிர்த்து ஒதுங்க நினைத்தனர்.
இந்நிலையில், சிபி ராதாகிருஷ்ணன், ‘ அதிமுக பாஜக கூட்டணி பற்றி நாளை (இன்று) முக்கிய முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.