இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் கலியுக பாகுபலி…?

0
1185

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ரஹீம் காரன்வால் சிறந்த ஆல்-ரவுண்டர் ஆவார். இதுவரை 55 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கார்ன்வால் 2,224 ரன்கள் எடுத்துள்ளார். 260 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

காரன்வால் உள்ளூர் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை அனைத்து திசைகளிலும் பறக்க விட்டுள்ளார். இதுவரை உடல் தகுதியை நிரூபிக்க முடியாமல் திணறி வந்துள்ளார். தற்போது உடல் தகுதியை நிரூபித்து இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கார்ன்வால் களமிறங்கினால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அதிக உடல் எடை கொண்ட வீரர் என்ற பெருமையை பெறுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here