திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் நாகப்பாடி கிராமத்தை சேர்ந்த மணியரசு (35), கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதுப்பாளையம் சங்கர் (45) என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இதுவரை கடனை திருப்பி செலுத்தாததால் சங்கர் தன் நண்பர்களுடன் நேற்று மணியரசு வீட்டிற்குச் சென்று அவரைத் தன் வீட்டிற்கு கடத்தி வந்தார். அங்கே இருந்து சாப்பிட்டு விட்டு வருவதாக வீட்டிற்கு சென்ற மணியரசு சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.
வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்
.
அதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் இச்சம்பவம் குறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.











