:
சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல், வருகின்ற 17 ஆம் தேதி வரை, நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை, கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
மலைக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, நாளை (வியாழன் கிழமை) பிரதோஷம் நாள் மற்றும் வரும் 16ம் தேதி (சனி கிழமை) சித்திரா பௌர்ணமி உள்ளிட்ட 4 நாட்களும், சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.













