தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளிலிருந்து ஆயுத பூஜை தீபாவாளிக்கு சிறப்பு பேருந்து இயக்குவது பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்தார்.
ஆயுத பூஜைக்கு ஊருக்கு சென்று திரும்ப வசதியாக வரும் அக்.8ஆம் தேதி சென்னையிலிருந்து 6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 6ஆம்தேதி திரும்பவும் சிறப்பு பேருந்து இயக்கப்படும்.
தீபாவளியை முன்னிட்டு அக்.24 முதல் 26 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயங்கும் பேருந்துகளோடு சேர்த்து மொத்தம் 10,940 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படும். கோவை, திருப்பூரிலிருந்து 8,310 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
நாளை (3ஆம்தேதி) முதல் முன்பதிவு தொடங்கும் எனவும் கூறினார்.















