தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடை மற்றும் பாரில், வழக்கம்போல் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர் இந்நிலையில் அதிகாலையில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கப் பணம் 10,000, 10ரூபாய் 5ரூபாய் நாணயங்கள் கொண்ட பாக்கெட்டுகள், மற்றும் மதுபானப் பாட்டில்களையும் .
டாஸ்மார்க் கடையோடு இயங்கி வரும் வள்ளிநாயகியாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான மதுபானக் கூடத்தையும் உடைத்து 2000 ரூபாய் ரொக்கப் பணமும் 3000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட் பொருள்கள், கேமரா, மற்றும் ஹார்ட் டிஸ்க்களை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.