முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக்குழுவை கலைக்க கோரிய மனு மீதான விசாரணை டெல்லி உச்சநீதி மன்றத்தில் நடக்கிறது.
இந்த வழக்கின் விசாரணையிலிருந்து விலகுவத்காக தலைமை நீதிபதி பாப்டே அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘ எனது சகோதரர் இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகி இருப்பதால் விலகிக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ இந்த மனுவை நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு விசாரிக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.














