தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டியில் உள்ள சௌபாக்யா மஹாலில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மதிமுக அனைத்து வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த துரைவைகோவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
56 ஆண்டுகாலம்
மக்கள் பணியாற்றி வரும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் பணிசுமையை குறைக்கும் வகையில் துரைவைகோவை மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பதவி தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.











