தேர்தல் வந்துவிட்டால் பிரச்சாரம் தொடங்குவதை விட எதிர்கட்சி மீது ரெய்டு மற்றும் விசாரணையை தொடங்குவதையே ஆளும் கட்சியான பாஜக தொடர்ந்து செய்துவருகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக சர்க்கரை ஆலைகளுக்கு கூட்டுறவு வங்கி கடன் சலுகை வழங்கியதில் 25 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக சரத் பவார் மற்றும் அவரது உறவினர் அஜீத் பவார் மீது அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே காவல் துறை மூலம் விசாரணை நடந்துவரும் நிலையில் மகாராஷ்டிரா தேர்தலையொட்டி அமலாக்கத்துறை இதை கையிலெடுத்துள்ளது.