நெல்லை அருகே இரவில் பதட்டம்: பைக்கில் வந்து கல்லூரி மாணவர் உட்பட இருவரை தாக்கியவர்களுக்கு வலை

0
1036

நெல்லை அருகே உள்ள மணப்படை வீட்டில் நேற்று இரவு ஒரு தெருவில் பைக்கில் வந்த அதை ஊரைச் சேர்ந்த ராமர் மகன் கதிர்( 21) முருகன் மகன் இசக்கிமுத்து என்ற சித்திரை( 21) ஆகியோர், அங்கிருந்தவர்களோடு தகராறு செய்ததோடு, கங்கைகொண்டான் டயர் கம்பெனியில் வேலை செய்யும் ஈராச்சி மகன் பால் தினகரன்( 21) பாளையங்கோட்டை கல்லூரியில் இளங்கலை படிக்கும் செல்வராஜ் மகன் டேனியல் (21) ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். காயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். இருதரப்பார் இடையே மீண்டும் தகராறு ஏற்படாதவாறு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here