அரியானாவில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் பலப்பரிட்சை நடத்துகின்றன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய பாஜக தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பாஜகவில் இணைந்துள்ளார்.
ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவை நேரில் சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங்கும் பாஜகவில் இணைந்தார்.
வீரர்களை இணைத்த பாஜக வெற்றிப்பதக்கத்தை முத்தமிடுமா?