கடையநல்லூரை சேர்ந்த சமுத்திரம் சொந்த ஆட்டோவில் பழ வியாபாரம் செய்கிறார். நேற்று வியாபாரம் முடித்து விட்டு திரும்பியபோது வயல்வெளியில் வேலை செய்த பெண்களை தனது ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார்.
அப்பெண்களில் ஒருவரான தேன்பொத்தையை சேர்ந்த பழனிச்சாமி மனைவி மாரியம்மாள், தான் பர்சை ஆட்டோவில் தவறவிட்டதை வீட்டிற்கு சென்றபின்பே உணர்ந்துள்ளார்.
இந்நிலையில், வீடு திரும்பிய ஆட்டோக்காரர் சமுத்திரம், ஆட்டோ சீட்டில் கிடந்த மணிபர்ஸை பார்த்தார். அதன் உள்ளே ரூ.6, 800 இருந்தது. உடனடியாக பர்சை கடையநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் முன்னிலையில் தவறவிட்ட பணம் மாரியம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏழ்மை நிலையிலும் நேர்மையாக பணத்தை ஒப்படைத்த ஆட்டோக்காரர் சமுத்திரத்தை அனைவரும் பாராட்டினர்.