சிதம்பரத்துக்கு மேலும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இம்முறை அகில இந்திய பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 28ஆம் தேதி ஆஜராக வேண்டுமென்று அதில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சிதம்பரத்தின் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை திரும்ப பெறவேண்டுமென்று பத்திரிகையாளர் ஒருவர் தொடுத்த வழக்கில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. சிதம்பரமோ, அவர் சார்பில் அவரது வழக்கறிஞரோ ஆஜராக வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார் கவுன்சில் நிர்வாகி பிரபாகரன் தலைமையிலான குழு விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.














