குடியாத்தம் சூறைக்காற்றுக்கு செவ்வாழை தோட்டம் நாசம்

0
471

வெப்பச்சலனம் காரணமாக வேலூர் மாவட்டத்திலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக குடியாத்தம் பகுதியில் 75 மி.மீ அளவுக்கு மழை பதிவானது.

குடியாத்தம் பகுதியில் நேற்று மாலை முதல் அதிகாலை வரை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் குடியாத்தம் சாமியார் மலை பகுதியில் முரளி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் இரவு வீசிய பலத்த காற்றுக்கு சாய்ந்து சேதமடைந்துள்ளது.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த மரங்களில் இருந்து வெட்டப்படும் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் இரண்டு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்

கோரிக்கை வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here