மலேசியாவில் சந்தித்து டெல்லியில் தங்கி சென்னையில் இணைந்து வளர்ந்த மந்திரி காதல்

0
1369

மலேசியாவில் சந்தித்து, டெல்லியில் தங்கி, சென்னையில் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வளர்ந்த உறவு எங்களுடையது என்று சேலத்தை பூர்வீகமாக கொண்டு, மலேஎசியாவில் வாழ்ந்து, தமிழ் திரையுலகில் துணை நடிகையாக உலா வந்த சாந்தினி அமைச்சர் மணிகண்டனுடனான தனது தொடர்பை விளக்கினார்.

மலேசிய சுற்றுலாத்துறை விளம்பர துறையில் தூதர் போல் இருந்த போது, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் அங்கு வந்தார். சந்தித்து பேசிய சில நாட்களில் காதல் வயப்பட்டார். சென்னைக்கு வந்த பின்பு நட்புரவு தொடர்ந்தது. கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்தோம்.

சென்னை சட்டமன்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது, மனைவியாகவே அவருடன் சட்டமன்ற வளாகத்துக்குள் சென்றேன். டெல்லிக்கு சென்றபோது மனைவியாக உடன் சென்று தங்கியுள்ளேன். அவருக்கு அரசியலில் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் நான் சுமை தாங்கியாக இருந்திருக்கிறேன். அப்போதெல்லம் என்னை அவர் கடுமையாக தாக்குவார்.

அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்தார். ஆனால், நாளடைவில் வெறுத்து ஒதுக்கினார். அதுபற்றி கேட்டபோது, ராமநாதபுரம் பகுதியிலிருந்து குண்டர்களை கொண்டுவந்து தாக்குவேன் என்று கூறினார். அவரால் பல முறை தற்கொலை முடிவுக்கு வந்தேன். ஒரு முறை தீக்குளிக்கவும் முயன்றேன்.

திருமணம் செய்துகொள்ள முடியாது என்றதோடு, அந்தரங்க படங்களை வெளியிடுவேன் என்று சொன்னதாலேயே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்.

இப்வ்வாறு சாந்தினி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here