சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுபஸ்ரீ (22). பொறியியல் பட்டதாரி. வீட்டுக்கு ஒரே பெண். இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். வழியில் பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மகன் திருமணத்துக்கு அனுமதியின்றி வைத்திருந்த பேனர் அவரது இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் அவர் அங்கேயே இறந்தார்.
லாரி டிரைவர் மனோஜ்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக பேனர் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை சிறிதும் மதிக்காமல் சென்னையில் பேனர்கள் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.














பதாகை……!
பாவிகளின் விளம்பரம் இது.
இறைவன் பெயர், ஆட்சியாளர்பெயரில், கந்துவட்டிக்காரன் பெயரில்,கடவுள் பெயரில், திருமணம், இழவு, காதுகுத்து, மொட்டைஅடித்தல், சடங்கு,சாவு அடக்கருமமே! இந்தப் பதாகைகளும் ஷாமியான எனச் சொல்லப்படும் கூரைகளும் படுத்துற பாடு என்பது மக்களைக் காவுகொள்ளும் ஓர் கருவி ஆக உதவுகிறது.
நாட்டுல எதைச் சொல்லிப் போராட இனி நாம்! அரசுக்கு மூளை என்ற ஒன்று எள்ளளவும் இல்லை என்பதை உணரமுடிகிறது.