தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து கடந்த 25 ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் முறப்பநாடு காவல் நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார்
இக்கொலையில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது என்று தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முதல்வர், கலெக்டர் எஸ்பி யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதை எடுத்து கொலை வழக்கின் விசாரணை அலுவலரான இன்ஸ்பெக்டர் ஜமால் நீக்கப்பட்டு, ரூரல் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மேலும், குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக ஏட்டு சரவணன்,தனிப்படை காவலர் மகாலிங்கம், முறப்பநாட்டிலிருந்து மாற்றப்பட்டு இப்பொழுது சாயர்புரத்தில் பணிபுரிந்த எஸ்ஐ சுரேஷ் ஆகியோர் நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.