டோக்கியோ ஒலிம்பிக்: நீச்சல் வீரர் சாஜன் நேரடி தகுதி

0
497


ஜப்பான் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 107 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர்.


வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, ஆக்கி, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் இருந்து 58 வீரர்களும், 48 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 106 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 27 வயதான அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த சாஜன் பிரகாஷ் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அதுவும், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஒரு நிமிடம் 56 வினாடி 48 மைக்ரோ வினாடிகளில் கடக்கவேண்டிய பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 56 வினாடி 38 மைக்ரோ வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here