கோவை குனியமுத்தூ அடுத்த சுண்டக்காமுத்தூர் விசாலாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகன் ஜெகதீஷ் (43). இவர் பாரதிய ஜனதா கட்சியின் குனியமுத்தூர் மண்டல் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஜெகதீஷ் மணல் வியாபாரம் உட்பட தொழில்கள் செய்து வருகிறார்.
நேற்று பகலில் தனது மனைவி குழந்தைகளுடன் அவரது அம்மா வீட்டிற்கு ஜெகதீஷ் சென்றுவிட்டார்.
இரவு 9 மணி அளவில் தனது குழந்தை மற்றும் மனைவியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து குனியமுத்தூர் பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இன்று காலை ஜெகதீஸ் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது கண்ணாடியில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் இருந்தது. வீட்டிற்குள் விலங்குகளை சுட பயன்படுத்தும் ஏர் கன்னிலிருந்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகள் சிதறிக் கிடந்ததைகண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து வேலூர் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கே சிதறிக்கிடந்த 10 துப்பாக்கி குண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.