சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை நிலவிவருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதால் அவர் கொலிஜியத்தின் முடிவை ஏற்று மேகாலயாவுக்கு செல்லவேண்டும் என அகில இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியது.
ஆனால், இது நியாயமற்ற இடமாறுதல் எனக்கூறி சென்னை, புதுவை பார் கவுன்சில் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில், கொலிஜியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ நீதிபதிகள் மாறுதல் தகுந்த காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால் மாற்றத்துக்கான காரணத்தை வெளியிட கொலிஜியம் தயாராக இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.