திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே அமைந்துள்ள மணி ஐயர் ஓட்டல் முன்பு நேற்று காலை 10 மணி அளவில் போக்குவரத்து ஏட்டு முத்துக்குமார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக கார் ஒன்றும் நின்றது
காரை அங்கிருந்து எடுக்குமாறு ஓட்டுநரிடம் முத்துக்குமார் கூறியுள்ளார். அவர் எடுக்க மறுக்கவே, ஆட்டோ டிரைவர்கள் ஆதரவுடன் அதை அகற்றி இருக்கிறார்.
இந்நிலையில் அமைச்சர் அனிதாவின் பி. ஏ. கிருபா எனது காரை எப்படி நீ ஓரங்கட்ட லாம்? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும், அவரது இரு ஆதரவாளர்கள் கைகளை பின்னே பிடித்துக்கொள்ள, போலீஸ் ஏட்டின் கன்னத்தில் மாறி, மாறி அறைந்துள்ளார்.
இதனால் வேதனை அடைந்த முத்துக்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இதுகுறித்து கோயில் காவல் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
தூத்துக்குடி எஸ். பி. யை பொருத்தவரை பிக்பாக்கெட் கேஸ் என்றாலும் தப்ப விடாமல் பிடிப்பவர் என்கின்றனர். ஆனால், இங்கே ரோட்டில் பல பேருக்கு நடுவில் போலீஸ் ஏட்டை அடித்த பின்பும் அது பற்றி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து மற்ற கட்சியினர் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரபரப்பாக்கி வருகின்றனர்.







