சென்னையில் 15 விற்பனை ஷோ ரூம்களை கொண்ட லான்சன் டயோட்டா நிறுவன நிர்வாக இயக்குநர் லங்காலிங்கத்தின் மனைவி ரீட்டா. அந்நிறுவனத்தின் துணைத்தலைவி.
நேற்று நிறுவன தொழில் பின்னடைவு தொடர்பாக தேனாம்பேட்டை அலுவலகத்தில் கூட்டம் நடந்துள்ளது. இதில் கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரீட்டா கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். வீட்டுக்கு வந்தும் அவர் கதவை திறக்காததால் கணவர் வெளியில் தங்கிவிட்டார். இந்நிலையில், ரீட்டா துக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
முன்பெல்லாம் தொழிலாளர்கள் வறுமையில் சாவார்கள். இப்போது தொழிலதிபர்களும் பொருளாதார நலிவால் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
லங்காலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தை சேர்ந்தவர்.













