மணப்பாடு மீனவர் கடலில் மாயம்

0
80

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மனப்பாட்டில் நேற்று பிற்பகல் வழக்கம் போல மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது 11 பேர் சென்ற படகு ஒன்று நள்ளிரவில் கரை திரும்பும் போது அலையில் சிக்கி கவிழ்ந்தது அதில் இருந்த மீனவர் வால்டர் 23 என்பவர் கடலில் மூழ்கினார். மற்ற மீனவர்கள் அவரைத் தேடியும் கிடைக்கவில்லை.உடனடியாக அவர்கள் கரையோர காவல் படைக்கும் காவல்துறையினருக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை முதல் கடலோர காவல் படையினரும் மீனவர்களும் வால்டரை மீட்க தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here