தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய டிரைவர் கைது – ஆட்டோ பறிமுதல்

0
10

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஆட்டோவில் கடத்தி வந்ததாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முருகராஜ் (25) என்பவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான போலீசார், கோவில்பட்டி தொழிற்பேட்டை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த முருகராஜின் ஆட்டோவை சோதனை செய்தனர்.
அப்போது, ஆட்டோவில் மூன்று மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 37 கிலோ எடையுள்ள, ரூ.19 ஆயிரத்து 800 மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆட்டோ டிரைவர் முருகராஜை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here