இந்த அவசர உலகத்தில் விவசாய வேலைகளை கூட விரைவாக செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் குறுகிய காலத்தில் பலன் தரும் வகையில் நவீன ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யூரியா போன்ற உரங்களை கூட உடனே கரைகின்ற திரவமாக தருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் விவசாய வேலைகளையும் விரைவில் முடிப்பதற்காக பல வித்தியாசமான முறைகளை கையாளுகிறார்கள். அப்படித்தான் ஆட்டுக்கிடை போடுவதில் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டிக்காரர்கள் விரைவான வழியை கண்டுபிடித்துள்ளார்கள்.

முன்பெல்லாம் ஆட்டுக்கடை போடுவது என்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆடுகளை நடத்திச் செல்லவே நாட்கணக்காகும். ஆனால் ரெட்டியார் பட்டியைச் சேர்ந்த சதீஷ், பிரசாந்த், மூக்காண்டி வாகனங்களிலேயே பட்டி, ஆடு போன்றவற்றை கொண்டு சென்று கடை அமைத்து கொடுக்கிறார்கள். கிடைக்கூலி எல்லாம் வழக்கம் போல் தான் வாங்குகிறார்கள்.
உழவுக்கு வெளியூர் ஆட்களை எதிர்பார்ப்பவர்கள், இனி கலப்பையும் மாடும் வண்டியேறி வரும் காலம் விரைவில் வரும் என்பதை நம்பலாம்.