நெல்லையில்ஏஐ தொழில்நுட்ப பக்தி பாடல் வெளியீடு.

0
10



நெல்லை. நவ 20.
திருநெல்வேல சந்திப்பு பாளையஞ் சாலை குமாரசாமி திருக்கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா கலைநிகழ்ச்சியில்
AI தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட
பக்தி பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி
நடைபெற்றது.

திருநெல்வேலியை சேர்ந்த AI தொழில்நுட்ப கலைஞர் மு.செந்தமிழ்
பாளையஞ்சாலை
குமாரசுவாமி கோயில் முருகக்கடவுளைப் பற்றி AI தொழில்நுட்பம் மூலம் பாடல் ஓன்றினை உருவாக்கி உள்ளார்.
இந்த பாடலின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி
திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலை குமாரசுவாமிக் கோயில் கலையரங்க மேடையில்
நடைபெற்றது.

இந்தப் பாடலை மேலப்பாளையம் செல்வன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் S. பிரேமச்சந்திரன் அவர்கள் வெளியிட,
திருநெல்வேலி புரோபஷனல் கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்
மேகலிங்கம் பெற்று கொண்டார்.

திருக்கோவிலின் புலவர் கந்த குமார், கவிஞர் புத்தனேரி கோ.செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில்
பட்டிமன்ற பாவலர் முத்தமிழ்,
சொற்பொழிவாளர்கள்
தேவி மாரிமுத்து,
செவிலியர் கண்காணிப்பாளர் மணிகண்டன்,
ஆசிரியை
பிரியா பிரபு,
சமய சொற்பொழிவாளர் சிவசங்கரி பிரபு,
பரமேஸ்வரி,
TV சுரேஷ் யோகிராம்,
கவிஞர் S.S.பிரபு,
மாரிமுத்து,
கடம்போடு வாழ்வு
நல்ல பெருமாள்,
கோபால்,
சிவகாமி, சங்கரலிங்கம்,
ஓவியர் கிஷோர்
உள்ளிட்டோர்
பலரும் கலந்து கொண்டனர்.

நிறைவில் பாடலை
உருவாக்கிய
AI தொழில் நுட்ப கலைஞர் மு.செந்தமிழ்
நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here