திசையன்விளை சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

0
4061

சற்று நேரத்திற்கு முன்பு நெல்லை மாவட்டம் திசையன்விளை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் இரு காவலர்களுடன் அருகே உள்ள நந்தன் குளத்திற்கு ரவுண்ட்ஸ் சென்றார்.அங்கு நான்கைந்து இளைஞர்கள் கோயில் முன்பு ‘செல்’களை பார்த்தவாறே பேசிக் கொண்டிருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் அவர்களிடமிருந்த செல்களை பறிக்க முயன்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.கோபமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கூட்டத்திலிருந்த வாலிபரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவரையும் அவருடன் வந்திருந்த காவலர்களையும் தாக்கினர். தாக்குதலுக்கு உள்ளான காவலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி கூடுதல் போலீசாருடன் வந்து சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களை மீட்டுச் சென்றார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here