தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், மினி லோடு வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மதுரையில் இருந்து குளோரின் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்து இலைக்கட்டுகளை ஏற்றிக்கொண்டு மதுரையை நோக்கி மினி லோடு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், எட்டயபுரம் அருகே எம்.கோட்டூர் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மினி லோடு வேன் எதிரே வந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் மினி லோடு வேனில் பயணம் செய்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த திலீபன் காயமடைந்தார். அவர் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த சிவலிங்கத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.











