கோவை அழகு நிலையங்களில்போலீசார் வசூல் வேட்டை

0
1183



கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் அழகு நிலையங்கள் ,ஆயுர்வேத சிகிச்சை மையங்களில் வசூல் வேட்டை நடத்தும் போலீசார் மீது தமிழக டி ஜி பி உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பபட்டுள்ளது.


கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அழகு நிலையங்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது அதேசமயத்தில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் களும் செயல்பட்டு வருகிறது. ஸ்பாக்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக கடந்த இரண்டு மாதங்களாக போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மேலும் அங்கே இருக்கும் இளம் பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

அதேவேளை, புறநகர் பகுதியில் கடந்த மாதத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சென்று உங்கள் மீது விபசார வழக்கு போடாமல் இருப்பதற்கு பணம் தரவேண்டும் என்று மிரட்டிய துடியலூர் போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை நகரிலும ஆயுர்வேத சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்களில் போலீஸார் வழக்கு பதியாமல் இருப்பதற்கு பணம் வேண்டுமென்று கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை நகரில் செயல்பட்டுவரும் ஒரு ஸ்பாவிற்கு சென்ற போலீசார் இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த ஸ்பா நடத்திவந்த உரிமையாளர் கடந்த பல ஆண்டுகளாக தாங்கள் நடத்தி வருவதாகவும் அதுபோல எதுவும் இங்கே நடைபெறுவதில்லை என்றும் கூறியிருக்கிறார். இருந்தபோதும் போலீஸார் லஞ்சமாக பணம் கொடுக்காவிட்டால் வழக்கு கண்டிப்பாக பதிவு செய்வோம் என்று மிரட்டி இருக்கின்றனர்.

அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் பணம் கொடுக்காததையடுத்து போலீசார் அங்கு விபச்சாரம் நடைபெறுவதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் தமிழக டிஜிபி மற்றும் கோவை போலீஸ் கமிஷனருக்கு இதுகுறித்து புகார் அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here