இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண இரண்டு மாநில அரசும் பேசி முடிவு செய்ய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆத்தூரில் பேட்டி.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவ சிலை திறப்பு விழா நடந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது சிலையை திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்தியில் மூன்று பிரதமர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு உண்டு. விவசாயங்கள் செழிக்க பொற்கால ஆட்சி நடத்தியவர் காமராஜர்.
மாற்றான் தான் அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. அதன் காரணமாகத்தான் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை இன்று மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் வெளியிடுவது அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து நிதியையும் மத்திய அரசு வழங்கும். கடந்த வருடம் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தோணியார்புரம் பாலம், ஏரல் பாலம் உட்பட பல்வேறு பாலங்கள் சேதமடைந்தது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். இலங்கைனாரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. மீனவர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலின் மீன் பிடிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி இலங்கை அரசுடன் பேசி இதற்கு முழு தீர்வு காண வேண்டும் அதன்படி கடற்படையினர் மட்டுமில்லாமல் கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதற்கும் இரண்டு மாநில அரசுகளும் பேசி சமூக தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.