பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பாஜக ‘மக்களுக்கு சேவை செய்யுங்கள்’ என்ற பெயரில் ஒரு வாரம் கொண்டாட உள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்.17ம் தேதியையொட்டி, செப்.14 முதல் 20ம் தேதி வரை மக்கள் சேவை வாரமாக கடைபிடிக்க உள்ளது. ஹிந்தியில் சேவா சம்பத் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளனர்.
பிறந்த நாளைக்கு முன்பாக செப்டம்பர் 14ம் தேதி துவங்கி, பிறந்த நாள் நிறைவடைந்த பிறகு, செப்டம்பர் 20ம் தேதிவரை இந்த கொண்டாட்டம் நீடிக்கும் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.